தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமலாகிறது. இந்நிலையில் ரயில், விமானப் பயணிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாகனங்கள் போதியஅளவு இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 20-ம்தேதி முதல், இரவு நேர ஊரடங்கு அமலான நிலையில், ஞாயிறு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி, மீன், காய்கறி கடைகள்,திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை.
பால், பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், மருத்துவத்துறை சார்ந்த வாகனங்கள், அனைத்துசரக்கு வாகனங்கள், விவசாய விளைபொருட்களுக்கான வாகனங்கள், எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. உணவகங்களில் காலை 6 முதல் 10, பகல் 12 முதல் 3, மாலை 6 முதல் 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்குநேரத்தில் பேருந்துகள் இயங்காவிட்டாலும் வெளியூர், உள்ளூர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. எனவே விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவசிய சேவைக்காக செல்வோர், ஆட்டோ, வாடகைக் கார்களை அழைக்கலாம் என்றாலும், அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, அழைப்புக்காக காத்திருக்கலாமா என்பது குறித்தும், அவர்கள்வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு திரும்பும்போது, எந்த ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மூத்த நிர்வாகி ஏ.எல்.மனோகரன் கூறும்போது, “சென்னைசென்ட்ரல், எழும்பூர், திருச்சி, மதுரைஉள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும்ரயில் பயணிகளை ஆட்டோ, கால்டாக்சியில் அழைத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் டிக்கெட் வைத்திருந்தால், ஆட்டோக்களில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு வரும் ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களிடம் போலீஸார் மறித்துகேட்டால், நாங்கள் எந்த ஆதாரத்தைகாட்டுவது என தமிழக அரசோ, தெற்கு ரயில்வேயோ தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.
இதே கருத்தை வாடகை கார் ஓட்டுநர்களும் தெரிவிக்கின்றனர். எனவே, இது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago