சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு பாதுகாப்பு படை வீரர், விமான நிலைய ஊழியர் உடந்தையாக இருந்திருப்பது தெரிந் தது. இதையடுத்து, அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமை இரவு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வரும் பயணி ஒருவர் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் பயணிகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது மும்பையை சேர்ந்த சந்த்வானி (32) என்பவர் 23 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், திங்கள்கிழமை காலையில் கொல் கத்தாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 7.5 கிலோ தங்கக் கட்டிகளுடன் 3 பேர் பிடிபட்டனர். தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வருபவர்கள், இந்த விமானங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சுங்கத் துறை அதிகாரிகள் திருச்சியில் தீவிர மாக சோதனை செய்தால் தங்கம் பிடிபடும். அதன்பின் அந்த விமானம் உள்நாட்டு சேவையில் ஈடுபடுவதால், சோதனைகளில் அந்த அளவுக்கு கெடுபிடி இருக்காது. சென்னையில் பிடிபட்ட தங்கமும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னை வந்துள்ளது. சென்னையில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத் ததால், தங்கம் சிக்கிக் கொண்டது. இந்த 23 கிலோ தங்கக் கட்டிகள் பற்றி சுங்கத் துறையினர் தீவிர விசா ரணை நடத்தினர். விசாரணையில், தங்க கடத்தலுக்கு விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் மற்றும் ஊழியர் ஒருவர் உடந்தையாக இருந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago