சேலத்தில் செவிலி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், தளிகாரகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் பவித்ரா(21) நர்சிங் முடித்து விட்டு, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவவமனையில் செவிலியாக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் (22ம் தேதி) காலை பணி முடித்து விட்டு பவித்ரா , மருத்துவமனை விடுதி அறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்காததால், உடன் பணியாற்றும் செவிலியர்கள் அறை ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, பிவித்ரா அறைக்குள் மயங்கி விழுந்து கிடந்தார். அஸ்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கபப்ட்டு, போலீஸார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அறையில் உயிரிழந்த நிலையில் பவித்தரா இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி போலீஸார் பிரேதபரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணையில், செவிலியர் பணி பிடிக்க வில்லை என்று பெற்றோரிடம் பவித்ரா கூறி வந்த நிலையில், அவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago