வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு கவச உடை ( பிபிஇ கிட்) அணிய விருப்பப்படும் வேட்பாளர், முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர் ஆகியோருக்கு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"அனைத்து வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கையுறை தரப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்னர் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி மதியம் 1 மணி, மாலை 6 மணி மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் மையங்களில் பயன்படுத்தப்பட்ட கரோனா மருத்துவ கழிவுகள் புதுச்சேரி சுகாதாரத்துறையால் அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படி மூன்று முறை சேகரிக்கப்பட்டு அகற்றப்படும்.
» சிவகங்கை மருத்துவமனையில் 10,000 லி., திரவ ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்
வேட்பாளர்கள், முகவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை
விருப்பமுள்ள வேட்பாளர்கள், முகவர்களுக்கு வரும் 28ம் தேதி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடக்கும். இதற்கான முடிவுகள் வரும் 30ம் தேதி தரப்படும். அனைத்து பிராந்திய வாக்குச்சாவடி மையங்களில் ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய தனி மருத்துவக்குழு பணியில் இருக்கும். சமூக இடைவெளிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை அறைகளில் பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கை ஐந்து ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பு கவச உடை ( பிபிஇ கிட்) அணிய விரும்பும் வேட்பாளர், முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலருக்கு தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago