புதுச்சேரியில் ஊரடங்கில் மதுக்கடைகளுக்கு முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதையடுத்து திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம்.
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அரசு அறிவித்து பல கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மது, சாராயக்கடைகள் நிலை தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "கரோனா தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் உள்ள அனைத்து மதுபான கடைகள், கள், சாராயக்கடைகள், மதுபார்கள், மதுபான உணவகங்கள் திறக்கக்கூடாது. அதையடுத்து வரும் 26-ம் தேதி திங்கள் கிழமை முதல் அனைத்து மதுபானம் தொடர்பான கடைகளும் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம்.
» தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை
» கரோனா பரவல்; புதுச்சேரியில் கைதிகளுக்கு பரோல், பார்வையாளர் அனுமதி ரத்து
அதன்பின் கடைகளை அடைக்க வேண்டும். விதிகளை கடைகளை திறந்து மதுபானம் விற்பனை செய்வோர் மீது கலால்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago