திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை, காவேரி மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, தகுதி பெற்ற அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே, இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டாலின் இன்று (ஏப். 22) காவேரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி இன்று எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகப் போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில், தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!
» ரூ.1.80 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கோவையில் பறிமுதல்: 4 பேர் கைது
» ஆக்சிஜன் குழாய் பழுதால் 7 பேர் பலி: மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago