புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும்: கரோனா பரவலால் செயலர் சுற்றறிக்கை

By செ. ஞானபிரகாஷ்

கரோனாவால் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தால்போதும் என்று அரசுத் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா பரவலையடுத்து புதுச்சேரி அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் அனைத்து அரசுத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

"புதுச்சேரியில் அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் குரூப் ஏ அதிகாரிகள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். அதேபோல் சார்பு செயலர்கள், துறைத்தலைவர்கள், துறை நிர்வாகிகள் அனைவரும் முழு அளவில் பணிக்குவரவேண்டும்.

குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதம்பேர் பணிக்கு வந்தால்போதுமானதாகும். அதாவது முழு எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் அந்த அலுவலகத்தில் பணிக்கு வரலாம்.

அதே நேரத்தில் அத்தியாவசியத் துறைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும் வருவாய் தொடர்பான துறைகள், கரோனா தொடர்பான பணிகளில் உள்ள துறைகளுக்கும் இவ்வுத்தரவு இல்லை.

குறிப்பாக 50 சதவீதம் பேர் பணிக்கு வரும் முறையானது தேர்தல் துறைக்கும், தேர்தல் தொடர்பான பணியில் உள்ள துறைகளுக்கும் கிடையாது.

அதேபோல் தேவைப்படுவோரையும் கரோனா மேலாண்மை பணிகளிலும் ஈடுபடுத்தலாம். மறு உத்தரவு வரும்வரை இம்முறை நடைமுறையில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்