ஹாட் லீக்ஸ்: ஸ்டாலினிடம் ப.சிதம்பரம் கொடுத்த பகீர் ஆதாரம்!

By செய்திப்பிரிவு

ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் தங்களது கோட்டாவில் காரைக்குடியைக் காங்கிரஸுக்காக கேட்டு வாங்கினார்கள். இதனால், சீமான்கள் சங்கடமாய் நினைப்பார்களோ என நினைத்து மற்ற காங்கிரஸ் தலைகள் யாரும் காரைக்குடி பக்கம் பிரச்சாரத்துக்கு எட்டிப் பார்க்கவில்லை. கே.எஸ்.அழகிரிகூட மேலூருடன் வண்டியைத் திருப்பிவிட்டாராம். இதனிடையே காரைக்குடி திமுகவினர் சிலர் காங்கிரஸுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்ததை உறுதிப்படுத்தும் ஆடியோ ஆதாரம் ஒன்றை ப.சிதம்பரத்திடம் கொடுத்தாராம் வேட்பாளர் மாங்குடி. இதை உடனடியாக ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிதம்பரம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாராம். இந்த விவகாரம் இப்போது திமுகவினர் மத்தியில் தீயாய் பரவி வரும் நிலையில், “திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்... காங்கிரஸ்காரங்களே ‘கை சின்னத்துக்கு ஓட்டுப் போடாதே’ன்னு வீடுவீடுக்கு திண்ணைப் பிரச்சாரம் பண்ணுனாங்களே, அவங்க மேல சிதம்பரம் என்ன நடவடிக்கை எடுக்கப் போறாராம்?” என்று திமுக சைடிலிருந்து சிலர் குரல் எழுப்புகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்