விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பிப்.12-ம்தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகையாக தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தவிர, பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உயிரிழந்த 27பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.5 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது. ஆனால், 27 பேரில் 2 பேருக்கு மட்டுமே பணம் இருந்தது. மற்ற 25 பேருக்கு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் பணம் இன்றி திரும்பின. மேலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரணத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதையடுத்து வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் இழப்பீடு மற்றும் அரசுகளின் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து விருதுநகர் ஆட்சியர் இரா.கண்ணன் கூறும்போது, “நிவாரணம் வழங்காதது எனது கவனத்துக்கு வரவில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு இழப்பீடு, நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago