கரோனாவுக்கு புதுச்சேரியில் ஒரே நாளில் ஐந்து பேர் பலியானார்கள். புதிதாக 565 பேருக்கு தொற்றும் உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா நிலவரம் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,564 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 455, காரைக்கால் - 53, ஏனாம் - 26, மாகே - 31 பேர் என மொத்தம் 565 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 713 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 ஆகவும் உள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது ஜிப்மரில் 225 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 298 பேரும், கோவிட் கேர் சென்டரில் 150 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3,849 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 4,692 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 336 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
» சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு: உதகையில் வணிகர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் போராட்டம்
அதேபோல் சுகாதார பணியாளர்கள் 30,202 பேர் (73 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 17,961 பேர் (61 நாட்கள்), பொதுமக்கள் 1,07,046 பேர் (45 நாட்கள்) என மொத்தம் 1,55,209 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago