புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தொடர்ந்து விதிமீறல் நடப்பதாக திமுக சார்பில் அடுத்தடுத்து புகார் தெரிவிக்கப்பட் டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலி மலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு, துணை ராணுவத்தினர், ஆயுதப்படைப் பிரிவினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வேட்பாளர்கள் சார்பில் நியமிக்கப் பட்டவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மையத்துக்குள், உரிய அனுமதி பெற்றவர்கள், வாகனங் கள் மட்டுமே சென்றுவர முடியும்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் அனுமதி சான்று ஒட்டப்படாத காவல்துறைக்கு சொந்தமான வேன் சென்றுள்ளது.
அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த வேனை நிறுத்தியுள்ளனர். பின்னர், அந்த வேனை சோதனை செய்ததில் கட்டிங் பிளேடு, ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட கருவிகள் 2 பெட்டிகளில் இருந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸார், அங்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக் குமாறு திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்ல பாண்டியன் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியி டம் நேற்று புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து கே.கே.செல்ல பாண்டியன் கூறியது: வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள்ளே சென்று திரும்ப வேண்டும். ஆனால், டீ வாங்கி வருவதற்காக போலீஸ் வேன் சென்றதாகவும், இந்த வேன் மெட்டல் டிடெக்டர் பிரிவினர் பயன்படுத்துவதால் அதற்குள் டூல்ஸ்கள் இருந்துள்ளன எனவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
முக்கிய பணியைக் கவனிக்கும் இந்த வேனுக்கு ஏன் அனுமதி சான்று கொடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.
இதே வளாகத்துக்குள் தேர்த லுக்கு மறுநாள் காலையில் விராலிமலை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கான காகித சீல் கிடந்தது. திருமயம் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள அறையின் வெளிப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பழுதாகியது. இது தொடர்பாக தனித்தனியாக புகார் மனு அளிக்கப்பட்டது. இதற் கிடையில் அனுமதி சான்று பெறாத போலீஸ் வாகனம் வந்தது மேலும் அச்சத்தை ஏற் படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை வாக்கு எண் ணும் மையத்தில் தொடர்ந்து விதி மீறல் நடப்பதாக தெரிகிறது. எனவே, தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் ஆலோசித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, வாக்கு எண் ணும் மையத்தை ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago