தமிழகத்தில் பல லட்சம் மரங்களை நட்டவர் நடிகர் விவேக், அவரது மறைவு எங்களது குடும்பத்தை ஆழ்ந்த வருத்ததில் ஆழ்த்தியுள்ளது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலிம் நடிகர் விவேக் பற்றி இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது,
”மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ .அப்துல் கலாம் அவர்களுடைய அன்புக்கு பாத்திரமானவர் நடிகர் விவேக் . கலாம் அவர்களுடைய மரம் நடுங்கள் என்ற வார்த்தையை ஏற்று பல லட்சங்கள் மரங்களை தமிழ்நாட்டிற்கு நட்டவர்.
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது ஒருமுறை நடிகர் விவேக் சென்னை ராஜ்பவனில் சந்தித்தபோது கலாம் அவரிடம், மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தைப்பற்றியும், மரத்தை நட்டு அதை பராமரித்து வளர்ப்பதைப் பற்றியும், திரைப்படத்தின் மூலம் எப்படி எடுத்து செல்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.
» கோவிட் சுரக்ஷா திட்டம்; கோவாக்சின் மருந்து உற்பத்தி திறன் அதிகரிப்பு
» 37 லட்சம் மரம் நட்டு அரசு செய்ய வேண்டியதை தனி மனிதனாக செய்தவர் விவேக்: சீமான் இரங்கல்
தொடர்ந்து விவேக் திரைப்படத்தில் கருத்து சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், களம் இறங்கி 10 லட்சம் மரத்தை நடுவேன் என்று இலக்கு நிர்ணயித்து, பல்வேறு நண்பர்களை இணைத்து பசுமை கலாம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன் 10 லட்சம் மரக்கன்றுகளையும் நட்டு, அதோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து மரம் நடும் பணிகளை செய்து கொண்டிருந்தார்.
கலாம் கூறியது போல உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. இந்த மரம் நடும் திட்டத்தின் இலக்கான 10 லட்சம் மரக்கன்றுகள் என்ற கனவு விவேக் அவர்களை உறங்கவிடாமல் செய்தது மட்டமல்ல, விவேக்கும், அவரது குழுவினரும், அவரது நண்பர்களும், பசுமைக கலாம் இயக்கத்தின் மூலமாக, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து 30 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைப்பதற்கும் அந்த கனவு தான் அச்சாரமிட்டிருக்கிறது.
கலாம் மறைவுக்கு பின்னும் நடிர் விவேக் எங்கள் குடும்பத்தோடு மிக உன்னத உறவைக் கொண்டிருந்தவர்.நடிகர் விவேக் மறைவு எங்கள் குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.அவருடைய குடும்பத்துக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை எங்களின் குடும்பத்தினரின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறாம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago