விவேக்கின் மறைவு திரைப்படத் துறைக்கும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப். 17) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"திரைப்படத் துறையினராலும் தமிழ் மக்களாலும் 'சின்னக் கலைவாணர்' என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
தனது சிறந்த நடிப்பாலும், உயர்ந்த பண்பாலும் திரைத்துறையை கடந்து அனைத்து மக்களின் அன்பையும் பெற்றவர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் நின்று சுற்றுச்சூழலின் தூய்மைக்காக தன்னை அர்ப்பணித்து கடமையாற்றியவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும் தமிழக அரசின் திரைப்பட துறைகளில் பல விருதுகளை பெற்றவர். அவரது மரணம் திரைப்படத் துறைக்கும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
» சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து பேசியவர் நடிகர் விவேக்: கனிமொழி இரங்கல்
» மனிதநேயரை, தூய சிந்தனை கொண்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம்: கே.எஸ்.அழகிரி இரங்கல்
அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும் திரைப்பட துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago