மதுரை மாநகரத்தில் மட்டுமல்லாது இங் கிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக் கப்படும் அரசு குளிர்சாதன பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கூடுதல் ‘ஏசி’ பஸ்களை இயக்க அரசுக்கு பரிந்துரைக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குளுகுளு ‘ஏசி’ பஸ் கள் இயக்கப்படுகின்றன. மதுரை மாவட் டத்தில் கடந்த பிப்ரவரி இறுதி முதல் இயக்கப்படுகிறது. மாவட்டத்தில் 10 மாநகர ‘ஏசி’ பஸ்களும், 16 புறநகர் ‘ஏசி’ பஸ்களும் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து ‘ஏசி’ பஸ்கள், சேலம், கோவை, நாகர்கோவில், ராமேசுவரம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
மற்ற அரசு பஸ்களை காட்டிலும் இந்த பஸ்களில் டிக்கெட் கட்டணம் கூடுதல் என்பதால் பயணிகள் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மத்தியில் இருந்தது. ஆனால், தற்போது மதுரை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த ‘ஏசி’ பஸ்களில் பயணிகள் விரும்பி காத்திருந்து ஏறிச் செல்கின்றனர்.
தற்போது கோடை வெயில் சுட்டெ ரிப்பதால் மதுரையில் புழுக்கமும், வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் கால் டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் கொடுத்துச் செல்லும் பயணிகள்கூட தற்போது பஸ்நிறுத்தங்களில் காத்திருந்து ‘ஏசி’ பஸ்களில் ஆர்வமுடன் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. அதுபோல் மதுரையிலிருந்து வெளிமாவட் டங்களுக்கு செல்லும் பஸ்களில் சொகு சாகவும், குளுகுளு வசதியுடன் ‘ஏசி’ பஸ்களில் செல்லலாம் என்பதால் இந்த பஸ்களில் ஏறுவதற்கு மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
கூடுதல் வருவாய்
கரோனா நெருக்கடி காலத்திலும் இந்த பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு உள்ளதால் இந்த பஸ்கள் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. அதனால் இன்னும் கூடுதலாக ‘ஏசி’ பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.
விரைவான பயணம்
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த பஸ்களில் குளிர்சாதன வசதியுடன் ஆம்னி பஸ்ளை போல் அகலமான இருக்கைகள், அவசர சிகிச்சை வசதிகள், தீ விபத்து பாதுகாப்பு கருவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இருக்கைகள், பொருட்கள் வைப்பதற்கு தனி வசதிகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், புறநகர் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்வதால் விரைவாக பயணிகள் பயணம் செய்ய முடிகிறது.
ஏசி பஸ்களில் தனியார் ஆம்னி பஸ் களைப் போல் வசதிகள் அதிகமாக இருந் தாலும் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. நிறுத்தங்களைப் பொறுத்து மாநகர ‘ஏசி’ பஸ்களில், மற்ற டவுன் பஸ்களைக் காட்டிலும் ரூ.7, ரூ.17 ரூபாய் வரை மட்டுமே கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளது. புறநகர் ஏசி பஸ்களில் செல்லும் நகரங்களை பொறுத்து மற்ற புறநகர் பஸ்களை காட்டிலும் ரூ.20 முதல் ரூ.50 வரை கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளது.
தற்போது வெயில் காலமாக இருப்பதாலும், சரியான நேரத்தில் செல்ல முடிகிறது என்பதாலும் பயணிகள் மத்தியில் ‘ஏசி’ பஸ்களுக்கு அதிக வரவேற்பு ஏற் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago