வேளச்சேரி 92-வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92-வது எண் வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த தும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங் களுக்கு அனுப்பப்பட்டன.

சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள சீதாராம் நகர் டிஏவி பள்ளியில் 92-வது ஆண்கள் வாக்குச் சாவடியில் இருந்து 2 மின்னணு இயந்திரங் கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவி பாட் இயந்திரத்தை விதிகளை மீறி இருச்சக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விசாரணையில் விவிபாட் இயந்திரத்தில் மட்டும் 15 வாக்குகள் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த வாக்குச்சாவடியில், 548 ஆண் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். அவர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படுகிறது.

வேளச்சேரி தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மறு வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிகிறது. மறுவாக்குப்பதிவு நடப்பதை முன்னிட்டு, வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வேளச்சேரி தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்