கரோனா தாக்கம்; மே 15 வரை செஞ்சிக் கோட்டையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

கரோனா வைரஸ் தொற்று காரணமாக, செஞ்சிக் கோட்டை மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து புராதானச் சின்னங்கள், இடங்கள் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை வரும் மே மாதம் 15-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

செஞ்சிக் கோட்டையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில், வெளிநாட்டில் இருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர்.

செஞ்சிக் கோட்டையில் உள்ள ராஜகிரி கோட்டையின் நுழைவு வாயிலில் கதவைப் பூட்டி தொல்லியல் துறையினர் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கரோனோ தொற்றைத் தடுக்கும் பொருட்டு செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு மே 15-ம் தேதி வரை அனுமதி மறுத்து அறிவிப்பு வெளியிட்டு, செஞ்சிக் கோட்டை நுழைவுவாயிலைத் தொல்லியல் துறையினர் இன்று (ஏப். 16) அடைத்துள்ளனர்.

இதனால் செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE