முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் கொட்டும் பனியில் விலங்குகள் கணக்கெடுப்புப் பணி

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கொட்டும் பனி யில் வன விலங்குகள் கணக்கெடுப் புப் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள புலிகள் காப்பகங்களில் பருவமழைக்கு முந்தைய, பிந்தைய காலங்கள் எனப் பிரித்து, ஆண்டுக்கு இரண்டு முறை புலிகள் மற்றும் பிற வன உயிரினங்கள், அதன் வாழ்விடங்களை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவ மழைக்கு பிந்தய கால கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. வரும் 23-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக் கிறது.

முதல் மூன்று நாட்கள் தாவர பட்சினிகளையும், அடுத்த மூன்று நாட்கள் மாமிச பட்சினிகள் குறிப்பாக புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இறுதி நாளில் வன விலங்குகளின் எண்ணிக்கை ஒருங் கிணைக்கப்பட்டு, தேசிய புலிகள் ஆணையத்துக்கு அறிக்கை அனுப் பப்படும்.

இப்பணியில் வன ஊழியர்களு டன், வேட்டைத் தடுப்புக் காவலர் கள், வனக் கல்லூரி மாணவர் கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். 36 குழுக்களாக பிரிக்கப்பட்ட இவர்கள், காப்பகத் தின் மொத்த பரப்பளவான 321 ச.கி.மீ. உள்ள 6 வனச்சரகங்களில், கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்குருத்தி தேசிய பூங்கா

நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரண மாக பனிப் பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் பனி கொட்டுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்குருத்தி தேசிய பூங்காவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு இரவு நேர தட்ப, வெப்ப நிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதனால் மாலை 3 மணிக்கே குளிர் தொடங்கிவிடுகிறது. இதேபோல், காலை 10 மணி வரையும் குளிர் நீடிக்கிறது.

பனிக் காலம் தொடங்கியுள்ள தால், விலங்குகளை அதிகமாக பார்க்க முடிவதில்லை. கால் தடங்கள் மற்றும் எச்சங்களைக் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது.

தடையில்லை

தற்போது முதல் முறையாக வன விலங்கு கணக்கெடுப்புப் பணியின்போது, முதுமலையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, “ஐந்து நாட்கள் வனப்பகுதிகளில் மதிப்பீடு பணிகள் நடத்தப்படும். கடைசி இரண்டு நாட்கள் பதிவுகள் சரிபார்க்கப்படும். கணக்கெடுப்பு நடப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை. வழக்கம்போல், அவர்கள் அனுமதிக்கப்படுவர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்