சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை; 7 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை; புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலையில் மழை பெய்தது. மேலும், 7 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

.இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையில் கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம், வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், தி நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரிக்கடல் பகுதியில் 1.5 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்