மழையால் விளைச்சல், வரத்து குறைவு: வேலூரில் மாம்பழம் விலை கடும் உயர்வு

By ந. சரவணன்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த திடீர் மழையால் மாம்பழம் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் வரத்து குறைந்து தற்போது மாம்பழத்தின் விலை அதிகரித்துள்ளதால் மாம்பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கனிகளில் முதலிடம் பிடிப்பது மாம்பழம். மற்ற பழங்களை காட்டிலும் மாம்பழத்தை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். காரணம் மாம்பழத்தில் ‘ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், இரும்பு சத்து மிக அதிகமாக உள்ளது. ரத்து சோகை உள்ளவர்களுக்கு மாம்பழம் நல்ல பலனை கொடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் மாம்பழத்தை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

இது மட்டுமின்றி மனித உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை மாம்பழத்தில் கிடைப்பதால் அனைத்து தரப்பினராலும் மாம்பழம் அதிகம் விரும்பப்படுகிறது. மாம்பழத்தில் பல வகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட ரகங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்புள்ளது.

குறிப்பாக, ‘மல்கோவா, அல்போன்சா, ருமானி, காலப்பாடு, நீலம், பங்கனப்பள்ளி, நடுசாலை (பீத்தர்), சப்போட்டா, செந்தூரா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த் போன்ற ரகங்களை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

பொதுவாக மாமரம் பூ பூக்கும் காலத்தில் மழை அதிகமாக பெய்தால் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் மழை பெய்ததால் மாம்பழம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது தவிர கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக மாம்பழம் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், தற்போது மாம்பழம் சீசன் தொடங்கிய பிறகும் வேலூர் பழ மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் மாம்பழத்தின் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை கணிசமாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேலூர் மாங்காய் மொத்த வியாபாரி சுப்பிரமணி என்பவர் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறியதாவது:

வேலூர் மாங்காய் மண்டியல் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாம்பழ விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலமான மார்ச் மாதம் தொடங்கும் மாம்பழம் விற்பனை ஜூலை அல்லது ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும்.

வேலூர் மாங்காய் மண்டிக்கு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, லத்தேரி, கரசமங்கலம், பனமடங்கி, பள்ளத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, பரதராமி, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மாம்பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தினசரி 200 முதல் 300 டன் வரை மாம்பழம் விற்பனைக்காக கொண்டு வருவோம். அவ்வாறு வரும் மாம்பழம் ஒரே நாளில் அல்லது 2 நாட்களில் விற்பனையாகிவிடும்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் மாம்பழம் வரத்து எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. உள்ளூரில் இருந்து மாம்பழம் லோடு வராததால் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். வெகு தொலைவில் இருந்து மாம்பழம் கொண்டு வரப்படுவதாலும், போக்கவரத்து செலவு, வரத்து குறைந்துள்ளதால் மாம்பழத்தின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.20 முதல் ரூ.200 வரை மாம்பழம் விற்பனை செய்கிறோம். மக்கள் அதிகமாக விரும்பும் மல்கோவா, அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், ருமானி ஆகிய ரகங்களில் விலை மேலும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

மொத்த வியாபாரத்தில் விலை உயர்ந்துள்ளதால் சில்லரை வியாபாரத்தில் அதிலிருந்து அதிகரித்துள்ளது. மக்களிடம் போய் சேரும் போது 2 முதல் 3 மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அதிக மழை, கரோனா நோய் பரவல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் செய்வோரின் வருகையும் குறைந்துள்ளது. எனவே, அதிக முதலீடு செய்து மாம்பழத்தை வாங்கி விற்பனை செய்ய மாம்பழ வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் எங்கு பார்த்தாலும் மாம்பழம் விற்பனை களைக்கட்டியது. ஆனால், இந்த ஆண்டு ஒரு சில இடங்களில் மட்டுமே மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. பழச்சாறு கடைகளிலும் தற்போது மாம்பழ தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஒரு சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மாம்பழத்தின் விலையே கேட்டதும் பழத்தை வாங்கும் எண்ணத்தையே பொதுமக்கள் கைவிட்டுவிடுகின்றனர் என சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாம்பழம் கொண்டு வரப்பட்டால் விலை ஏற்றத்தில் மாற்றம் கொண்டு வரலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்