கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் உயிரிழந்த நோயாளியின் உடல் மாற்றி அனுப்பப்பட்டு இஸ்லாமிய முறைப்படி புதைத்ததை, அதிகாரிகள் தோண்டி எடுத்து சம்பந்தப்பட்டவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (55). இவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனோ வார்டில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று ஜாகீர் உசேன் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஜாகீர் உசேன் வீட்டுக்குத் தகவல் தரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பெற்று, ஜாகீரின் சொந்த ஊரான ஆதிவராகநத்தம் பகுதிக்குக் கொண்டு சென்று அவர்களின் மத வழக்கப்படி புதைத்துள்ளனர். இந்நிலையில் கடலூர் கரோனா வார்டில் உள்ள மருத்துவ அதிகாரிகள் ஜாகீர் உசேன் வீட்டுக்கு போன் செய்து அவரது உடலை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடையத்த அவரது குடும்பத்துனர் இதுகுறித்துக் கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை செய்ததில் மருத்துவமனையில் உடலை மாற்றி அனுப்பியது தெரிந்தது. அதாவது கரோனா வார்டில் உயிரிழந்த பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் உடலை மாற்றி அனுப்பி வைத்தது தெரியவந்தது.
» நாமக்கல் அருகே 3-வதாகப் பிறந்த பெண் குழந்தை; கொலை செய்து புதைப்பா?- உடலை மீட்டுப் பரிசோதனை
இதனையடுத்து ஜாகீர் உசேனின் உடலை அவரது உறவினர்கள் பெற்று அவரது சொந்த ஊரில் புதைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன் முன்னிலையில் புவனகிரி போலீஸார், கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடலைத் தோண்டி எடுத்து அவரது சொந்த ஊரான புதுப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா நோயாளி ஒருவரின் உடல் மாற்றி அனுப்பப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago