அரக்கோணம் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

By கி.மகாராஜன்

அரக்கோணம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். கருணாநிதி காலத்துக்கு பிறகு திமுக பெரிய பின்னடைவை சந்திக்கும்.

ஈ.வெ.ரா, அம்பேத்கர் உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் சிலைகள், படங்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. இது வண்மையாக கண்டிக்கதக்கது.

அரசியல் லாபத்திற்காக ஜாதியை திரும்ப திரும்ப ஊட்டி வருவதே ஜாதிய கொலைகளுக்கான அடிப்படை காரணம். அரக்கோணம் இரட்டை கொலை வழக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. இக்கொலைகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் நாடு முழுவதும் கிடைத்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி கிடைக்காமல் போய்விடும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை.

தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று சொல்வார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் அவ்வாறு சொல்வதில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இல்லை. அவ்வாறு சொல்பவர்களிடம் தான் கோளாறு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாநகர் பாஜக துணைத் தலைவர் ஹரிகரன் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்