விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்க, அவர்களது குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு அதற்கான களஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தீப் பெட்டி, பட்டாசு ஆலைகள், செங் கல்சூளை ஆகிய இடங்களில் ஏராளமான குழந்தைத் தொழிலா ளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களைக் கண்டறிந்து மீட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து கல்வி வழங்க விருதுநகர் மாவட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் கடந்த 1986-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் விருதுநகர் மாவட் டத்தில் சிவகாசி பகுதியில் இரு ளாண்டிபுரம், தையலர் காலனி, நேருஜி நகர், சிலோன் காலனி, அண்ணா காலனி, விளாம்பட்டி, சுபாஷ்சந்திரபோஸ் காலனி, திரு வள்ளுவர் காலனி, திருத்தங்கல், எம்.ஜி.ஆர். காலனி, எஸ்.என்.புரம், வத்திராயிருப்பு அருகே மேலபாளையம், மடவார்வளாகம், சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி, படந்தாள், மேட்டமலை, அருப்புக் கோட்டை அருகே பாலவனத்தம், திருவில்லிபுத்தூர் அருகே மங்கா புரம் ஆகிய 18 இடங்களில் செயல் பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங் களில் 9 முதல் 14 வயதுக்குட்பட்ட 414 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இச்சிறப்பு பயிற்சி மையங்களில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு மாணவர்கள் அருகில் உள்ள அரசு முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின் றனர். விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு இதுவரை 10,560 மாணவர்கள் பயிற்சியளிக் கப்பட்டு முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2015-16-ம் கல்வி ஆண்டில் மட்டும் 231 மாணவ, மாணவிகள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.150 கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும் மதிய உணவு, மதிய உணவுடன் வாரம் 5 முட்டைகள், பாடப்புத்தகங்கள், விளையாட்டுப் பொருட்கள், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. கல்வியோடு மாணவர்களுக்கு தையல், கூடை பின்னுதல், கம்பளி நூல் பின்னுதல், பூக்கள் பின்னுதல் போன்ற தொழிற்கல்வி பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
ஆனாலும், இச்சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர் களில் சுமார் 65-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பயிற்சி மையங்களுக்கு வருவதில்லை. சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் இடைநின்ற மாணவர் களின் வீடுகளுக்குச் சென்று மாணவர் மற்றும் குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகள் என்ன என்பதை அறியும் வகையில் தற் போது ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இது குறித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மற்றும் வளர்ச்சிப் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
மாணவர்கள் இடைநிற்றலுக்கு குடும்பச் சூழ்நிலையே முக்கிய காரணம். எனவே, ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களது தேவைகள், பிரச்சி னைகள் ஆகியவற்றை அறிவதற் காகவே இந்த கள ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது.
வறுமையில் உள்ள மாணவ ரின் குடும்பத்துக்கு முதல்கட்டமாக அவர்களது வாழ்வாதாரத்தை ஏற் படுத்தும் வகையில் இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், வீடு இல்லாதோருக்கு வீட்டுமனைப் பட்டா, குடியிருப்பு கட்டிக்கொடுத்தல், ஆர்வம் உள் ளோருக்கு சுயதொழில் தொடங்க கடன் வசதி, மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கு கல்விக் கடன் வழங்குவது போன்று அரசு வழங் கும் நலத்திட்டங்களில் இக்குடும்பத் தினருக்கு முதல் முன்னுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
வறுமையில் வாடும் கும்பத்தின ருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத் திக் கொடுத்தால் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலா ளர் இல்லாத நிலையையும், பள்ளி செல்லும் மாணவர்கள் இடைநிற்ற லையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago