உணவக உரிமையாளரிடம் வருத்தம் தெரிவித்த கோவை  காவல் ஆணையர் 

By டி.ஜி.ரகுபதி

உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய உணவக உரிமையாளரிடம், கோவை மாநகர காவல் ஆணையர் வருத்தம் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், சாஸ்திரி சாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.

கடந்த 11-ம் தேதி இரவு இவரது உணவகத்துக்கு வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, அங்கிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை தாக்கினார்.

இதில் ஜெயலட்சுமி, ஆறுமுகம், சதீஸ்குமார் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் பிரேமானந்தன் விசாரித்து வருகின்றார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் மோகன்ராஜை மாநகர காவல் ஆணையர் தனது அலுவலகத்துக்கு இன்று (13-ம் தேதி) வரக் கூறினார்.

அதன்பேரில் மோகன்ராஜ் இன்று காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து, ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை சந்தித்தார்.

அப்போது உதவி ஆய்வாளர் முத்துவின் செயல்பாடுகளுக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உணவக உரிமையாளர் மோகன்ராஜிடம் வருத்தம் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் முத்து மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்