மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 15ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது நிலவும் கரோனா தொற்று நோய் காரணமாக சித்திரைப் பெருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படவுள்ளதால் கோயிலில் குறித்த நேரங்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு காலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
ஏப்ரல் 15ம் தேதி கோயில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறும். அன்று சுவாமி புறப்பாடு காலையில் 9 மணிமுதல் 11.30 வரை, மாலையில் 5.30 மணிமுதல் 7.30 வரை. இதில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கும் நேரம் காலையில் 6 மணி முதல் 9 வரை, 11.30 மணி முதல் 12.30 வரை. மாலையில் 4 மணிமுதல் 5.30 வரை, 7.30 மணி முதல் 9 வரை.
ஏப்ரல் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் 9 வரை, மாலையில் 5.30 மணிமுதல் 7 வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கும் நேரம் காலை 6 மணியிலிருந்து 8 வரை, 9 மணிமுதல் 12.30 வரை. மாலை 4 மணிமுதல் 5.30 வரை, 7 மணிமுதல் 9 வரை.
» திருச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன: ஆட்சியர் தகவல்
ஏப்ரல் 22ம் தேதி எட்டாம் திருநாள் பட்டாபிஷேகத்தன்று சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் 9 வரை, மாலையில் 6.30மணிமுதல் 9 மணிவரை. பக்தர்களுக்கு அனுமதி நேரம் காலை 6 மணியிலிருந்து 8 வரை, மாலை 4 மணிமுதல் 6.30 வரை.
ஏப்ரல் 23ம் தேதி திக்குவிஜயம் சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் 9 வரை, மாலை 5.30 மணிமுதல் 7.30வரை. பக்தர்கள் அனுமதி நேரம் காலை 6 மணிமுதல் 8 வரை, 9 மணிமுதல் 12.30 வரை, மாலை 5.30 மணிமுதல் 7.30 வரை.
ஏப்ரல் 24ம் தேதி 10ம் திருநாள் திருக்கல்யாணம் 8.30 மணிமுதல் 9 மணிக்குள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் காலை 9.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பின்னர் 3.30 மணிமுதல் 5.30 வரை, மாலை 7.30 மணிமுதல் 9 வரை. சுவாமி புறப்பாடு மாலை 5.30 மணிமுதல் 7.30 வரை.
ஏப்ரல் 25ம் தேதி சட்டத்தேர் காலை 5 மணிமுதல் 7 மணிக்குள் நடைபெறும். சுவாமி புறப்பாடு 5.30 மணிமுதல் 7.30 வரை. பக்தர்கள் அனுமதி நேரம் காலை 7 மணிமுதல் 12.30 வரை, மாலை 4 மணிமுதல் 5.30 வரை, 7.30 முதல் 9 வரை.
ஏப்ரல் 26ம் தேதி 12ம் திருநாள் சுவாமி புறப்பாடு 10.30 மணிமுதல் 12.30 வரை, மாலை 5.30 மணிமுதல் 7.30 வரை. பக்தர்கள் அனுமதி நேரம் காலை 7 மணிமுதல் 10.30 வரை, 4 மணிமுதல் 5.30 வரை, 7.30 மணிமுதல் 9 வரை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago