வாலாஜா அருகே கரி மண்டியில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 13 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இது தொடர்பாக 2 பேர் மீது வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டத்துக்கு உட்பட்ட அனந்தலை அடுத்த மேல்புதுப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கரி மண்டியில் குழந்தைகள், பெண்கள் என 13 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், துணை வட்டாட்சியர் விஜயசேகர், வரு வாய் ஆய்வாளர் சோனியா, கிராம நிர்வாக அலுவலர் அதிய மான், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் ஆனந்தன், வாலாஜா உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் அடங்கிய அரசு அதிகாரிகள் மேல்புதுப்பேட்டை பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, ராணிப் பேட்டையைச் சேர்ந்த கரி மண்டி உரிமையாளர் அருண்குமார் (41), அவரது நிறுவன மேற்பார் வையாளர் தென்றல் (27) ஆகி யோர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த சங்கர், சீனு, சரத்குமார், பச்சையப்பன், சித்ரா, மகாலட்சுமி, தேவி, கோவிந்தம்மாள், ரேணுகா,சத்யா, சந்தோஷ், பார்த்தீபன், ரஞ்சித் ஆகிய 13 பேரை கொத்தடிமைகளாக கரி மண்டியில் வேலைக்கு அமர்த்தியது தெரியவந்தது. மேலும், சம்பளம் வழங்காமல் முன்பணமாக கொடுத்த ரூ.2.64 லட்சம் பணத்தை திருப்பி தரும் வரை கரிமண்டியில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் எனக்கூறி வேலை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கரி மண்டியில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 5 பெண்கள், 4 ஆண்கள், 4 குழந்தைகள் என 13 பேர் மீட்கப்பட்டு, அவர்கள் முன்பணமாக வாங்கிய ரூ.2.64 லட்சத்தை சார் ஆட்சியர் இளம்பகவத் ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீட்கப்பட்ட 13 பேரும் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து 13 பேரையும் சார் ஆட்சியர் இளம்பகவத் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, அனந்தலை கிராம நிர்வாக அலுவலர் அதியமான் வாலாஜா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கரிமண்டி உரிமையாளர் அருண்குமார் அவரது மேற்பார்வை யாளர் தென்றல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago