சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் 14,135 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு: மாநகராட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த 14 நாட்களில் கரோனா தொற்றால் 14,135 பேர் பாதிக்கப்ப்ட்டுள்ளன்ர். இதில் 6023 பேர் வீட்டுத்தனிமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 4001 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று வேகாமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து கரோனா தொற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கு தளர்வு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்த கரோனா தொற்று குறுகிய காலத்தில் அதிகரித்தது.

தமிழகத்தில் அன்றாட கரோனா தொற்றின் எண்ணிக்கை 6000 நோக்கி செல்கிறது. சென்னையில் கரோனா தொற்றின் எண்ணிக்கை 2000 நோக்கி செல்கிறது. சென்னையில் தொடர்ந்து மற்ற மாவட்டங்களைவிட கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிலும் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட கூடுதலாக கரோனா பதிவாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் 14 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,023 மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் 8003 பேர். அதில் அரசு மருத்துவமனையில் 4,001 பேரும், தனியார் மருத்துவமனையில் 3,746 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கோவிட் கேர் சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 256 பேர் ஆவர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மண்டலம் 5,6,7,8,9,10 ஆகிய மண்டலங்களில் எண்ணிக்கை நான்கு இலக்கத்தை தாண்டியுள்ளது.

மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை வருமாறு:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்