விளைச்சல் குறைவால் திண்டுக்கல்லில் தர்பூசணி விலை உயர்வு

By செய்திப்பிரிவு

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் இருந்து தப்பித்து உடலை குளுமைப்படுத்த மக்கள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். இவற்றில் ஆண்டுதோறும் முக்கியத்துவம் பெறுகிறது தர்பூசணி.

திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் தர்பூசணி விளைச்சல் அதிகம் இல்லாத நிலையில் வடமாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் அதிகளவில் தர்பூசணி வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விற்பனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தர்பூசணி விளைச்சல் குறைந்தே காணப்பட்டதால் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த விலை அதிகரித்து காணப்படுகிறது. பழக்கடைகளில் மட்டுமின்றி திண்டுக்கல் நகரின் பல இடங்களில் தர்பூசணிக்கென தனியாக கடைகள் வெயில் காலத்திற்கென தொடங்கப்பட்டுள்ளன. சாலையோர கடைகளில் தர்பூசணிகள் நூற்றுக்கணக்கில் குவித்துவைத்து வியாபாரம் செய்கின்றனர். சிலர் வெயிலின் தாக்கத்தை குறைக்க அங்கேயே வாங்கி உட்கொண்டு செல்கின்றனர்.

கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் தர்பூசணி விற்பனையும் அதிகரித்துள்ளது என்கின்றனர் வியாபாரிகள். இதுகுறித்து திண்டுக்கல் புறவழிச்சாலை அருகே தர்பூசணி மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஆண்டுதோறும் சீசனில் மட்டும் தர்பூசணி வியாபாரம் செய்கிறோம். திண்டிவனம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் தர்பூசணி விளைவிக்கப்படுவதால் அங்கிருந்து லாரிகள் மூலம் வாங்கி வருகிறோம். விற்பனையாக, விற்பனையாக தொடர்ந்து வாங்கி வருவோம். கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனையானது. இந்த ஆண்டு விளைச்சல் குறைவால் ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனையாகிறது.

வியாபாரத்தில் எந்தவித மந்தமும் இல்லை. கடந்த ஆண்டுபோலவே இந்த ஆண்டும் அதிகம் விற்பனையாவதால் வியாபாரம் நல்ல முறையில் உள்ளது. வெயிலின் தாக்கம் குறைய இன்ன மும் இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை தர்பூசணிக்கு கிராக்கியாகத்தான் இருக்கும். மேலும் வரத்து குறைந்தால் விலை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்