திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50). இவரது மனைவி செல்வி (47). இந்தத் தம்பதிக்கு அஸ்வின் (19) என்கிற மகனும், அகல்யா (17) என்கிற மகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ராகவன் இறந்துவிட்டார்.
இதனால் மீனாட்சி உள்பட மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, நேற்று (ஏப். 08) இரவு செல்வி தனது தங்கை மகாலட்சுமியை தொலைபேசியில் அழைத்து தன் கணவர் இறந்துவிட்டதால், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வாழப்பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இது குறித்து, மகாலட்சுமி கொடுத்த தகவலின் பேரில், ஊத்துக்குளி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், கதவை உடைத்துப் பார்த்தபோது, மீனாட்சி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது முதலிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago