புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.100 அபராதம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹோட்டல் சங்கத்தினருக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

”கரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. நூறு சதவீதம் கரோனாவை கட்டுப்படுத்த நூறு இடங்களில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இப்பணி வரும் 11 முதல் 14 வரை புதுச்சேரியில் நடக்கும். புதுச்சேரியில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் முககவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் நாளை முதல் விதிக்கப்படும். இதைபோல் நாளை முதல் செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளோம். அதன்படி, முககவசம் அணியாவிட்டால் கடைகளில், மால்களில் அனுமதிக்கக்கூடாது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும் இருக்கைகளில் 50 சதவீதத்தினரை மட்டும் அனுமதிக்கவேண்டும். திருக்கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இரவு 12 முதல் காலை 5 வரை கரோனா கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருக்கும். பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை. ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கரோனா அதிகரிக்கும் சூழலில் பல கட்டுபபாட்டுகளை விதித்து விட்டு மதுவிலையை குறைத்துள்ளீர்களே என்று கேட்டதற்கு, "மதுவிலை ஏற்கெனவே இருந்தவிலைதான் நடைமுறைக்குவந்துள்ளது. புதிதாக மதுவிலையை குறைக்கவில்லை. கரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு நிலை இல்லை. கட்டுப்பாட்டுடன் இருந்து கரோனாவை வெல்வோம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்