விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் 34,263 பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். ஆனாலும், மொத்த வாக்காளர்களில் 4.38 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், ராஜபாளையம் தொகுதியில் 1,16,390 ஆண் வாக்காளர்களில் 84,915பேரும், 1,22,564 பெண் வாக்காளர்களில் 91,661 பேரும், இதர வாக்காளர்கள் 29 பேரில் 3 பேரும் என 2,38,983 வாக்காளர்களில் 1,76,579 பேர் (73.89 சதவிகிதம்) வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,21,607 ஆண் வாக்காளர்களில் 89,129 பேரும், 1,28,160 பெண் வாக்காளர்களில் 93,571 பேரும், இதர வாக்காளர்கள் 32 பேரில் 5 பேரும் என மொத்தம் உள்ள 2,49,799 வாக்காளர்களில் 1,82,699 பேர் (73.14 சதவிகிதம்) பேர் வாக்களித்துள்ளனர்.
» எம்.பி ரவீந்திரநாத் கார் தாக்கப்பட்ட சம்பவம்; அமமுக நிர்வாகி கைது: தேனியில் சாலை மறியலால் பரபரப்பு
» ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 5 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,22,402 ஆண் வாக்காளர்களில் 91,645 பேரும், 1,30,071 பெண் வாக்காளர்களில் 98,170 பேரும், இதர வாக்காளர்கள் 29 பேரில் 3 பேரும் என மொத்தம் 2,52,501 வாக்காளர்களில் 1,83,503 (75.17 சதவிகிதம்) பேர் வாக்களித்துள்ளனர்.
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,27,397 ஆண் வாக்காளர்களில் 90,265 பேரும், 1,34,135 பெண் வாக்காளர்களில் 93,236 பேரும், இதர வாக்காளர்கள் 27 பேரில் 2 பேரும் என மொத்தம் 2,61,559 வாக்காளர்களில் 1,83,503 (70.16 சதவிகிதம்) பேர் வாக்களித்துள்ளனர்.
விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,09,240 ஆண் வாக்காளர்களில் 78,206 பேரும், 1,14,465 பெண் வாக்காளர்களில் 81,254 பேரும், இதர வாக்காளர்கள் 46 பேரில் 7 பேரும் என மொத்தம் 2,23,751 வாக்காளர்களில் 1,59,467 (71.27) பேர் வாக்களித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,08,218 ஆண் வாக்காளர்களில் 81,209 பேரும், 1,15,112 பெண் வாக்காளர்களில் 87,645 பேரும், இதர வாக்காளர்கள் 17 பேரில் 2 பேரும் என மொத்தம் 2,23,347 பேரில் 1,68,856 (75.6 சதவிகிதம்) பேர் வாக்களித்துள்ளனர்.
திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,08,288 ஆண்களில் 83,573 பேரும், 1,12,755 பெண் வாக்காளர்களில் 87,662 பேரும், இதர வாக்காளர்கள் 12 பேரில் 2 பேரும் என மொத்தம் 2,21,055 வாக்காளர்களில் 1,71,237 பேரும் (77.46 சதவிகிதம்) பேர் வாக்களித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆண் வாக்காளர்கள் 8,13,542 பேரில் 5,98,936 பேரும், 8,57,262 பெண் வாக்காளர்களில் 6,33,199 பேரும் இதர வாக்காளர்கள் 192 பேரில் 24 பேரும் என 16,70,996 வாக்காளர்களில் 12,32,159 பேர் (73.74 சதவிகிதம்) வாக்களித்துள்ளனர்.
இதில், ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 34,263 பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர். அதேவேளையில் மொத்த வாக்காளர்களில் 4,38,837 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago