தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.06) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.
» கோவில்பட்டியில் மந்தமான வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி வெறும் 8.43% பதிவு
» எதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மாதம் அடைத்து வைக்க வேண்டும்?- வாக்களித்தபின் சீமான் கேள்வி
காலை 9 மணி வரை நிலவரப்படி தமிழகத்தில் 13.80% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 9.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாவட்ட வாரியாக வாக்குப் பதிவு நிலவரம்:
1. திருவள்ளூர் - 12.98%
2. சென்னை - 10.58%
3. காஞ்சிபுரம் - 14.80%
4. வேலூர் - 12.74%
5. கிருஷ்ணகிரி - 13.38%
6. தருமபுரி - 15.29%
7. திருவண்ணாமலை - 14.97%
8. விழுப்புரம் - 14.21%
9. சேலம் - 15.76%
10. நாமக்கல் - 16.55%
11. ஈரோடு - 13.97%
12. நீலகிரி - 12.39%
13. கோயம்புத்தூர் - 14.65%
14. திண்டுக்கல் - 20.23%
15. கரூர் - 16.46%
16. திருச்சி - 14.03%
17. பெரம்பலூர் - 14.68%
18. கடலூர் - 13.68%
19. நாகப்பட்டினம் - 12.54%
20. திருவாரூர் - 13.66%
21. தஞ்சாவூர் - 13.85%
22. புதுக்கோட்டை - 13.77%
23. சிவகங்கை - 12.90%
24. மதுரை - 13.56%
25. தேனி - 14.06%
26. விருதுநகர் - 15.04%
27. ராமநாதபுரம் - 12.50%
28. தூத்துக்குடி - 12.55%
29. திருநெல்வேலி - 9.98%
30. கன்னியாகுமரி - 12.09%
31. அரியலூர் - 13.83%
32. திருப்பூர் - 13.66%
33. கள்ளக்குறிச்சி - 14.00%
34. தென்காசி - 12.88%
35. செங்கல்பட்டு - 11.66%
36. திருப்பத்தூர் - 13.21%
37. ராணிப்பேட்டை - 13.84%
மொத்த வாக்குப்பதிவு - 13.80%
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago