விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 16.84 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி தொகுதியில் 363 வாக்குச்சாவடிகளும், மயிலம் தொகுதியில் 368 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம்(தனி) தொகுதியில் 388 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) தொகுதியில் 393 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் தொகுதியில் 444 வாக்குசாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 396 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 419 வாக்குச்சாவடிகளும் என மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 2368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவைகளில் 3179 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் 11,368 பேர் பணியில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 16,84,504 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 8,51,082 பெண் வாக்காளர்களாவர். ஆண் வாக்காளர்களைவிட 17,876 பெண் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களிக்கின்றனர். மேலும் 215 திருநங்கைகளும் வாக்களிக்கின்றனர். கூடுதலாக 1306 பேர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 2368 வாக்குச்சாவடிகளில் 33 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என்றும்,53 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 2 பேர் வீதம் 2368 வாக்குச்சாவடிகளுக்கு 4736 சுகாதாரப்பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, சானிடைசர், கையுரை வழங்குவார்கள்.
தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன், எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் ஜோஸ்தங்கையா, தேவநாதன், கோவிந்தராஜ், 11 டி எஸ்பிக்கள் , 36 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள், 203 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2,206 உள்ளூர் போலீஸாரும், 8 கம்பெனிகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் என 585 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 35 பேரும் மற்றும் பிற மாநில போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஊர்காவலர் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் என 1,176 பேரும் ஆக மொத்தம் 4,002 பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 6 மணிவரை பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 59 லட்சத்து 38 ஆயிரத்து 791 ரொக்கம் மற்றும் அரிசி, குக்கர்கள், புகையிலை பொருட்கள், கஞ்சா பொட்டலங்கள், சாராயம், மதுபாட்டில்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள், என ரூ.65 லட்சத்து 28 ஆயிரத்து 373 மதிப்பிலான பொருட்கள் ஆக மொத்தம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து 164 மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago