ஊத்தங்கரையில் அதிமுக ஊராட்சி நிர்வாகியிடம் ரூ.3.53 லட்சம் பறிமுதல்

By எஸ்.கே.ரமேஷ்

ஊத்தங்கரை அருகே அதிமுக நிர்வாகியிடம் ரூ.3.53 லட்சம் ரொக்கத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சென்னப்பநாயக்கனூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அதிமுக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று (4ம் தேதி) இரவு 10 மணிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும்படையினர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமு வீட்டில் சோதனை நடத்தினர்.

அவரது வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது வீட்டில் மீண்டும் சோதனை நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு மையத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து இன்று(5ம் தேதி காலை) அதிகாலை 4 மணியளவில் ராமூ வீட்டில் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 800, ஊத்தங்கரை தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கத்திடம், பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்