மக்கள் தெளிவா இருக்கீங்க; நான் பேசுறதே வேஸ்ட்; நாம ஜெயிக்கப் போறோம் பெஸ்ட்: ஸ்டாலின் சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி நாள் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் பேசும்போது பொதுமக்கள் குறுக்கிட்டு பாயிண்ட்டை எடுத்துக் கொடுத்தனர். உடனே ஸ்டாலின், அதுகுறித்து நான் பேசறதே வேஸ்ட், நாம ஜெயிக்கிறதுதான் பெஸ்ட் என்று சுவாரஸ்யமாகப் பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பெரம்பூரில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக கொடுத்துள்ள விளம்பரங்கள் குறித்துப் பேசினார். ''அதிமுக ஆட்சியில் பெண் எஸ்.பி.க்குப் பாலியல் கொடுமை நடந்தது. அதில் பாலியல் கொடுமை செய்தது ஒரு டிஜிபி. அதுவும் ஸ்பெஷல் டிஜிபி. விளம்பரத்தில் அதைப் போட வேண்டியதுதானே'' என்று பேசினார். தொடர்ந்து பொள்ளாச்சி விவகாரம் பற்றிப் பேசிய பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசினார்.

உடனே கூட்டத்திலிருந்து சாத்தான்குளம் என்று மக்கள் குரல் கொடுத்தார்கள். இதைக் கேட்ட ஸ்டாலின், ''எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. நான் பேசுறதே வேஸ்ட்'' என்றார். கூட்டம் கைதட்டியவுடன், ''நாம் ஜெயிக்கிறது பெஸ்ட்'' என்று பேசினார்.

தொடர்ந்து ஜெயலலிதாவின் கோடநாடு கொலை என்று மக்கள் கூற, ''ஆமாம் கோடநாடு கொலை ஒண்ணா ரெண்டா எடுத்துச் சொல்ல, உண்ட வீட்டிலேயே கொள்ளை அடித்தார்கள்'' என்று பேசிய ஸ்டாலின், கோடநாடு பங்களா என்று கூற, கோடநாடு எஸ்டேட் என்று குரல் வந்தது. ''நான் பேசவே வேண்டியதில்லை. நல்லா ஷார்ப்பா இருக்கீங்க'' என்று ஸ்டாலின் பேசினார்.

பாஜக, அதிமுகவுக்கு ஜீரோ கொடுத்தால் நாம ஹீரோ ஆகிவிடுவோம் என்று தொடர்ந்து ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்