தேர்தல் பணிக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கரோனா: மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்ற மதுரை ஆட்சியர்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வை யாளரான ஐ.பி.எஸ். அதிகாரியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தனது காரில் அழைத்துச் சென்று மருத்து வமனையில் சேர்த்தார்.

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் உள்ளூர், வெளிமாநில துணை ராணுவ வீரர்கள் பணிகளை கண்காணிக்கும் பார்வை யாளராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தரம்வீர் யாதவ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகிறார். மதுரை மாநக ராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவல் துறை விடுதியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. உடனே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, அவருடைய வாகன ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த அந்த ஓட்டுநர், கரோனா அச்சம் காரணமாக தன்னால் மருத்துவமனைக்கு வர இயலாது என தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், உடனே கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு தனது காரில் அவரே ஓட்டிச் சென்று தரம்வீர் யாதவை அழைத்துச் சென்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, ஐபிஎஸ் அதிகாரி தரம்வீர் யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

ஆட்சியரின் இந்த செயல் அரசு அலுவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்