மதுரையில் மூன்று வருடங்களுக்குள் எய்மஸ் மருத்துவமனையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் பேசும்போது, “எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பது தொடர்பாக பிரதமரும், முதல்வரும் உறுதி அளித்துள்ளனர். மதுரையில் மூன்று வருடங்களுக்குள் எய்மஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தகுந்த நடவடிக்கைகளை எடுப்பேன். மிகச் சிறப்பான மருத்துவமனையாக எய்ம்ஸ் மருத்துவமனை திகழும்.
திருப்பரங்குன்றத்தில் அரசு கலைக்கல்லூரியைக் கொண்டு வருவேன். மேலும் மல்லிகைப் பூவுக்கான நறுமணத் தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்" என்று ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு இதுவரை வராமல் அடிக்கல் நாட்டப்பட்ட அளவிலேயே உள்ளதை மக்கள் உணரும் வகையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். உதயநிதியின் இந்தப் பிரச்சாரம் மக்களிடம் கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மதுரைக்கு பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago