சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் நடிகை கவுதமியை பிரச்சாரம் செய்ய விடாமல் மது போதையில் ஒருவர் இடையூறு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து நடிகை கவுதமி நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஹெச்.ராஜா அருமையான குணம் கொண்டவர். தைரியமாக, நியாயமாகப் பேசக் கூடியவர். இப்படிபட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து நிவர்த்தி செய்வார்.
ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவச மாகத் தரப்படும். மேலும் வாஷிங் மிஷின் இலவசமாகவும், மாதந் தோறும் ரூ.1,500-ம், வீடு தேடி ரேஷன்பொருட்களும் வரும். குழந்தைகளைக் காப்பாற்றப் போராடுவோருக்கு இந்த அறிவிப்பு பெரும் உதவியாக இருக்கும், என்று பேசினார்.
நடிகை கவுதமி இடையர் தெருவில் பேச முற்பட்டபோது. கூட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர், இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைத்த சிமென்ட் சாலையை பாதாள சாக்கடைக்காகச் சேதப்படுத்தி விட்டனர். அச்சாலையைப் பாது காக்க வேண்டும் என திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் கவுதமி பேசு வதில் இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பாஜகவினர் போதையில் இருந்த வரை சமாதானப்படுத்தி அதே தரம் உள்ள சாலை அமைத்துத் தருவதாகக் கூறினர். அதன்பிறகே அவர் சமாதானம் அடைந்தார். போதை நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago