வாகன அனுமதி கிடைக்காததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்டோவுடன் போராடிய சுயேச்சை

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைத்த நிலையில், வாகன அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரச்சார ஆட்டோவுடன் போராட்டம் நடத்தினார்.

திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மருதுஅழகுராஜ், திமுக சார்பில் கே.ஆர்.பெரியகருப்பன், அமமுக சார்பில் கே.கே.உமாதேவன் உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் சுயேச்சையாக போட்டியிடும் பெரியசாமி என்பவருக்கு தர்பூசணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். ஆனால் வாகனத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

மூன்று நாட்களாக அலைந்தும் அனுமதி கிடைக்காததால் இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரச்சாரத்திற்காக வாடகைக்கு எடுத்த ஆட்டோவுடன் போராட்டில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக வாகன அனுமதியை தேர்தல் அதிகாரிகள் வழங்கினர்.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் பெரியசாமி கூறுகையில், ‘‘ பிரச்சாரத்திற்கு அனுமதி தந்தவர்கள், வாகனத்திற்கு அனுமதி தர மறுக்கின்றனர். வாகனமில்லாமல் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும்.

அரசியல் கட்சியினர் தூண்டுதலால் எனக்கு அனுமதி தர மறுக்கின்றனர். இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர்,’’ என்று கூறினார்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து கூறுகையில், ‘‘தற்போது தான் எனது கவனத்திற்கு வந்தது. உடனடியாக அனுமதி வழங்கிவிட்டேன். மேலும் அந்த பிரிவில் இருந்த ஊழியரையும் இடமாற்றம் செய்துவிட்டேன்,’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்