சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன்?- சரத்குமார் பதில்

மாற்றத்துக்கான சிந்தனையை மக்களிடம் விதைத்து இருக்கிறோம், நிச்சயமாக அந்த சிந்தனை மக்களிடத்தில் உள்ளது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சி தலைவர் சரத்குமார் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறும்போது ”பிரச்சாரம் மேற்கொள்வதற்காகவே தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காகவே அயராது உழைக்கிறோம். பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு தொகுதியும் செல்வது சாதாரணமானது அல்ல.

பிரச்சாரம் மிகக் முக்கியமானது. மக்களை சந்திப்பதற்கு கடுமையான உழைப்பை தர வேண்டியுள்ளது. திமுக, அதிமுக தலைவர்களுக்கு வாக்கு வங்கி உள்ளதன் அடிப்படையில் அவர்கள் தேர்தலில் போட்டியிடும் அதேச நேரத்தில் பிரச்சாரத்திலும் பயணித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கில் பயணித்து கொண்டிருக்கிறோம், மக்களிடம் எங்கள் கூட்டணியையும், சின்னத்தையும் சேர்க்க வேண்டும்.

மாற்றத்துக்கான சிந்தனையை மக்களிடம் விதைத்து இருக்கிறோம். நிச்சயமாக அந்த சிந்தனை மக்களிடத்தில் உள்ளது என்று நம்புகிறோம். அரசியலில் மாற்றத்தை தரலாமா என்று எண்ணுகிற சூழல், மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது” என்றார்.

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இந்தமுறை கமல்ஹாசினின் மக்கள் நீதி மய்யதுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE