எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் மீண்டும் மேம்பாலப் பணி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்சார்பில், அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் போட்டியிடு கிறார். இவர், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தினசரி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.`

வேட்பாளர் மகேந்திரன் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று காலை பிரச்சாரம் மேற் கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே திருமால் நகர், சந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர், பழனியப்பா நகர், ஜிஆர்டி நகர், பாலசுந்தரம் நகர், உடையாம்பாளையம், ராஜீவ் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட வீதிகளில் வேட்பாளர் மகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல், வசந்தாமில் ரோடு, ஐயர் லேஅவுட், நீலிகோ ணாம்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, அண்ணா நகர், வரதராஜபுரம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, வேட்பாளர் மகேந்திரன் பேசும்போது, ‘‘எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் தொடங்கப்பட்ட மேம்பால பணியை, முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் மக்கள் இப்பகுதியில் இருந்து பிரதான சாலைக்குச் செல்ல, வேறு வழியின்றி விமானநிலையம் வழியாக அதிக தூரம்சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. நான் வெற்றிபெற்றால், இந்தப் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி, விரைவில் முடித்துத் தருவேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்