பண்ருட்டியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்றிரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். 1,000 ஏக்கருக்கு சொந்தக் காரரான ராஜேந்திரன், அவரது சொத்தைவிற்று அரசியல் பணி ஆற்றிவருகிறார். கட்டப்பஞ்சாயத்து செய்யாதவர்.
ஆனால் எதிரணியில் போட்டியிடும் நபரோ வழிப்பறி, நில அபகரிப்பு செய்பவர். அவர் (வேல்முருகன்) மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. அவரை தேர்வு செய்தால் பண்ருட்டி தாங்காது. அவரை நம்பிச் செல்லும் இளைஞர்கள் சுமார் 500 பேர் மீது வழக்கு உள்ளது.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிக் குருவுக்கு நேர் எதிராக அந்த நபர் அரசியல் செய்தார். ஏதோ சில வார்த்தைகளை நம்பி அவர் பக்கம் குருவின் பிள்ளைகள் சென்று விட்டனர். அவர்கள் அதை உணர்ந்து திரும்பி வருவார்கள் என நம்புகிறேன். அவர்கள் என் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வேன். அதேபோன்று அவரை நம்பி செல்லும் இளைஞர்கள் படித்து முன்னேற வேண்டும். அவர்களது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அதிமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago