மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை: சேலத்தில் பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு

By வி.சீனிவாசன்

மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க சேலம் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. சேலம் மாநகர பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சாக்கடை கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.

மேலும், ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை சேலத்தில் பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தொடர் மழையால் பள்ளி கட்டிட சுவர்கள் தண்ணீரில் நனைந்து ஈரமாக காட்சி அளிக்கிறது.

மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய, நடு நிலைப்பள்ளி கட்டிங்கள் பெரும்பலானவை மோசமான நிலையில் உள்ளன.

பழுதான பள்ளி கட்டிடங்களை பட்டியலிட்டு, அவற்றை சீரமைக்கும் பணி மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாநகர பகுதியில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மழை பாதி்ப்பில் இருந்து காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் கூறும் போது, ‘‘மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் மட்டுமல்லாமல் சாலை, சாக்கடை மற்றும் மாநக ராட்சி கட்டிடங்கள் பாதிக்கப்பட் டுள்ளதா என அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்