வேலூரில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச வெயில் அளவாக 106.3 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மார்ச் மாதம் பிற்பகுதியில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும். இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக சுமார் 100 டிகிரி வெயில் அளவை நெருங்கியபடி பதிவாகி இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி இந்த ஆண்டில் முதல் முறையாக 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி என்று தொடங்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும். ஆனால், நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி பதிவானது குறிப் பிடத்தக்கது. அதிகப்படியான வெயில் காரணமாக நேற்று பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. மாலை நேரத்தில் வீடுகளில் புழுக்கமான சூழல் இருந்தது.
தி.மலையில் 100 டிகிரி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்சம் 110 டிகிரி வெயில் வரை பதிவாகும். இதனால், மக்கள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் படும் இன்னல்கள் அதிகம். வெப்பத்தால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்துவிடும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் வெயில் சற்று தணிந்திருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களது எண்ணத்தை அக்னி பகவான் தவிடு பொடியாகிவிட்டார். பங்குனி மாதத்திலேயே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் வெயிலின் வெப்பம் 100.4 டிகிரியாக பதிவாகி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ளது. அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சித்திரை மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நாட்களில் நிலைமை தீவிரமடையும். பொதுமக்கள் தங் களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச் சரிக்கையாக செயல்பட வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க்கலாம். மோர் மற்றும் தண்ணீர் உள்ளிட்டவைகளை அதிகளவில் பருக வேண்டும். கோடையில் மழை பொழிந்தால் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago