கரோனா பரவல் அதிகரிப்பு: தியேட்டர், மால், வழிபாட்டுத்தளங்கள், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தளங்கள், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “2020 -ம் ஆண்டு பரவத் துவங்கிய கரோனாவின் தாக்கம் தணிந்து வந்த நிலையில், தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 21 -ம் தேதி நிலவரப்படி, 47 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரிக்கு பின் தொற்று பரவல் 4.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 5.81 கோடி மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர், மாவட்ட அளவில் நிலைமையை ஆராய்ந்து கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்க, டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், வழிபாட்டு தளங்கள், விளையாட்டு மைதானங்களை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்