பிரதமர் மோடி தாராபுரத்தில் கலந்துகொள்ளும் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற உள்ளாட்சித்துறை அமைச்சர், சட்டப்பேரவை சபாநாயகர் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 30) கேரள மாநிலம் பாலக்காடு, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், புதுச்சேரி மாநிலம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபால், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று (மார்ச் 30) தாராபுரத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு இன்று (மார்ச் 30) காலை சென்றுள்ளனர்.
அப்போது, இவர்களது வாகனங்கள் தாராபுரம் சாலை காதபுள்ளப்பட்டி பிரிவு அருகே அடுத்தடுத்து மோதியதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. இதில், வாகனத்தில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வாகனத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபால், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இல்லை. அவர்கள் முன் சென்ற வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது. இது தொடர்பாக குண்டடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago