மதுரைக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அவரே அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது, கட்டுமானப் பணி கள் எப்போது தொடங்கும் என்பது பற்றி விளக்கம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக் கல் நாட்டிச் சென்றார்.
நாட்டின் மற்ற பகுதிகளில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று கட்டுமானப் பணியை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்த கடனுதவியைப் பெற மத்திய அரசு விரைவாக முயற்சிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் போதிய அழுத்தம் தரவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரு கின்றனர்.
தற்பாது தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விவ காரத்தை மையமாக வைத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிமுக-பாஜக கூட்டணி மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. இதற்கு அதிமுகவினரும், பாஜகவினரும் பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி பதிலளித்து வருகின்றனர்.
மதுரைக்கு கடந்த வாரம் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் கே.பழனிசாமி, விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படும் என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்துச் சென் றார்.
நரேந்திர மோடி மதுரை வருகை
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார்.
மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு நிதி ஒதுக்காததற்கான காரணம் மற்றும் எப்போது கட்டுமானப் பணி தொடங்கும் என்பது குறித்தும், எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கும் பிரதமர் மோடி பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago