அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு: பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கருத்து

அதிமுக ஆட்சியில் தான் பெண் களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது என பாமக மாநில இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து பாமக மாநில இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், அரியலூர்-செந்துறை ரவுண்டானாவில் திறந்த வேனில் நின்று நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியது: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பலகட்ட போராட்டங்களை பாமக முன்னெடுத்தது. தற்போது அதற்கான தீர்வை முதல்வர் பழனிசாமி தந்துள்ளார். இந்த தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரியான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் விவசாயி வெற்றி பெற வேண்டும். திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசா, முதல்வர் குறித்தும், பெண்மை குறித்தும் இழிவான வார்த்தைகளை பேசியுள்ளார். நயன்தாரா குறித்து தவறாக பேசிய நடிகர் ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ராசா மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு முழுபாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கு பல் வேறு திட்டங்களை முதல்வர் பழனி சாமி செயல்படுத்தி உள்ளார். தற்போதைய தேர்தலிலும் பல திட்டங்களை அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன் றவை நடைபெறும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலின், திமுகவினரை நம்பாமல், பீகாரைச் சேர்ந்த பிரசாந்த்கிஷோரை நம்பி தேர்தலை சந்திக்கிறார். ஸ்டாலினால் ஊடக ஆதரவில் லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுகவை புறக்கணிப்போம், அதிமுகவை ஆதரிப்போம் என அனைத்து சமுதாய மக்கள், இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

தொடர்ந்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து செந்துறை அண்ணா சிலை அருகிலும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலுவை ஆதரித்து ஜெயங்கொண்டம் நான்குசாலை பகுதியிலும் அன்பு மணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE