அரவக்குறிச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் அரவக்குறிச் சியில் பாஜக வேட்பாளர் அண்ணா மலையை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியது: அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மண் ணின் மைந்தர். பொதுவாக பதவிக்காகதான் பலர் அரசியலுக்கு வருவார்கள். ஆனால், அண்ணா மலை வித்தியாசமானவர். அவர், காவல் துறையில் வகித்த முக்கிய பதவியை துறந்துவிட்டு, தமிழகம் நலம் பெற வேண்டும். அதிலும் தனது பகுதி, தொகுதி, கிராம மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என அரசியலுக்கு வந்துள்ளார்.

பிரச்சினைகளின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காணக்கூடியவர்.மத்தியில் மோடி தலைமையில் பாதுகாப்பான நாடாக, வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா உள்ளது. விரைவில் வல்லரசு நாடாக மாறும். தமிழக முதல்வர், துணை முதல்வர் சாமானியர்கள். மக்கள் எண்ணங்களை பிரதிபலிப் பவர்கள். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் ஆளுமையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக பணியாற்றி உள்ளது.

நாட்டிலேயே மகளிருக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழகம். எனவே, பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நடிகை கவுதமி பிரச்சாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி காருடையாம்பாளையம், நெடுங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடிகை கவுதமி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, அரவக்குறிச்சி பகுதி யிலேயே வேலைவாய்ப்பை உருவாக்குவதாக அண்ணாமலை சொல்கிறார். எனவே, இப்பகுதி யைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு வெளியூர் செல்லத் தேவையில்லை. இதனால், தொழில் வளம் பெருகும். அரவக்குறிச்சி வளரும். எனவே, அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்