அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?: வழக்கு பதிவு செய்ய தயங்கும் காவல்துறை

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 44 குழந்தைத் திருமணங் களும், இந்த ஆண்டில் இதுவரை 37 குழந்தைத் திருமணங்களும் நடந்துள்ளன. ஆனாலும், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதி களின் தலையீட்டால், குழந்தைத் திருமணம் நடத்துவோர் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை உற்சாகமாகக் கொண் டாடுகிறோம். ஆனால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அடக்கு முறைகளும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின் றன. குறிப்பாக மலைவாழ் சமூகத்தினரிடமும் கிராமப் புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் இன்ன மும் முழுமையாகத் தடுக்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் மட்டும் 8 இடங்களில் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 3 இடங்களில் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம் குழந்தைத் திருமணமாகக் கருதப்படும்.

சமூகத்திலும், குடும்பத் திலும் பெண்களுக்கு உரிய இடம் அளிக்காதது, வரதட்சணை, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினை கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, போதிய கல்வி அறிவின்மை, வறுமை, பாலியல் ரீதியான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமை, குடும்பத்தில் பெண் குழந்தைகளை சுமையாகக் கருது வது, பாலின விகிதம் சமம் இல்லாத நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன.

குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதி, குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர், சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன் (1098) ஆகியோருக்குத் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் கூறும்போது, குழந்தைத் திருமணம் நடப்பதை அறிந்து அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் தகவல் தெரிவித்துவிடுகின்றனர். இதனால், அவர்கள் தங்களை தொடர்புகொண்டு வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுங்கள் என நிர்பந்தம் செய்வதாகவும் புகார் கூறப்படுகிறது. குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான மற்றும் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் நாளுக்கு நாள் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருவதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

என்ன தண்டனை?

குழந்தைத் திருமணம் செய்துவைப்போருக்கு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006-ன் படி 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் செய்துகொள்பவரும் குற்றவாளியாகவே கருதப்படுவார். திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், தூண்டியவர்கள், நெறிப்படுத்தியவர்கள், நடத்தியவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தான் என குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்