நெல்லையில் சூடுபிடிக்கிறது தேர்தல்களம்: முதல்வர் இன்று வாக்கு சேகரிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். ஏற்கெனவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இம்மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் 2-வது முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து காலை 11.30 மணிக்கு காவல்கிணறிலும், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் கணேசராஜாவை ஆதரித்து 12.30 மணிக்கு நாங்குநேரியிலும் முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று மாலை 4 மணிக்கு சிந்துபூந்துறை சாலைத்தெருவில் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாபையும், மாலை 5 மணிக்கு தச்சநல்லூரில் திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனையும் ஆதரித்து பேசுகிறார். பின்னர் மேலப்பாளைய த்திலும் வாக்கு சேகரிக்கிறார்.

இதுபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பாளையங்கோட்டை, திருநெல் வேலி தொகுதி திமுக வேட்பாளர் களை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்